மாதம் 300 ரூபாய், 12 மாதத்துக்கு செலுத்தினால் தீபாவளிக்கு உளுத்தம்பருப்பு 20 கிலோ, துவரம்பருப்பு 20 கிலோ, க.பருப்பு 6 கிலோ, ப.பருப்பு 3 கிலோ, வேர்க்கடலை 2 கிலோ, கோல்டுவின்னர் எண்ணெய் 40 லிட்டர் உட்பட பூஜைப் பொருட்கள், தீபாவளி பட்டாசு பாக்ஸ் உட்பட 100 பொருட்கள் தரப்படும்.
அதுவே மாதம் 2,999 செலுத்தினால் 32 இன்ச் எல்.இ.டி. டிவி, ப்ரிட்ஜ், பீரோ, ஹோம் தியேட்டர், டைனிங் டேபிள், கட்டில், சோபாசெட், கிரைண்டர் என 20 பொருட்கள். மாதம் 3,999 ரூபாய் செலுத்தினால், 1 சவரன் தங்க நெக்லஸ், அரைசவரன் மோதிரம், கால்சவரன் தங்க ஜிமிக்கி, கால்சவரன் காது சுத்துவட்டம், கால்சவரன் ஞானக்குழாய், கால்சவரன் நதியா கம்மல், கால்சவரன் தாலிக் குண்டு, 100 கிராம் வெள்ளிக் கொலுசு என நீள்கிறது பட்டியல்.
இப்படியொரு நோட்டீஸ் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் வி.ஆர்.எஸ். குரூப்ஸின் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்கிற பெயரில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் தந்துள்ளார்கள். 500 நபர்களை சேர்த்துவிட்டால் ரொக்கமாக ஒரு லட்சம் வழங்கப்படும் என்கிற அறிவிப்பால் ஆயிரக்கணக்கான ஏஜென்ட்கள் உருவாகியுள்ளார்கள். கடந்த தீபாவளியின்போது சொன்னதுபோல் பொருட்களைத் தரவில்லை. ஏஜென்ட்கள், வி.ஆர்.எஸ். உரிமையாளர் சம்சுமொய்தீனைக் கேட்டுள்ளனர். "பொருட்கள் வருவதில் தாமதம் பொங்கலுக்குத் தந்துவிடு கிறேன், இல்லன்னா பணம் தந்துடறன். நம்பிக்கைக்கு செக், ஃபாண்ட் தருகிறேன்' என தந்து சமாதானம் செய்துள்ளார்.
பொங்கல் நெருங்க சில தினங்களுக்கு முன்பு அலுவலகம் மூடப்பட்டுவிட்டது, ஆள் எஸ்கேப்!
திருவண்ணாமலை நகரத்தில் இயங்கியுள்ளது ஸ்டார் பவுண்டேசன் -ஸ்டார் சேவா மையம். தமிழ்நாடு முழுவதும் சின்னச் சின்ன என்.ஜி.ஓ. அமைப்பினரை ஸ்டார் பவுண்டேசன் மற்றும் ஸ்டார்சேவா மையத்தோடு இணைந்து, மாவட்ட ஒருங்கிணைப் பாளராக்கி மாதச்சம்பளம் வழங்கி யுள்ளனர். அவர்களின் வேலை பவுண்டேசன் சார்பில் இலவச தையல் மிஷின் வழங்குதல், தாலிக்கு தங்கம், இலவச கனிணிப் பயிற்சி, ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, காது கேளாதவர்களுக்கு இலவச காது கேட்கும் கருவி வழங்குதல், வேளாண்மை அபிவிருத்தி திட்டம், இலவச கறவைமாடு, ஆடு, நாட்டுக்கோழி வழங்குதல், தவணைக் கடன் வழங்குகிறார்கள் என கிராம மக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும்.
உதவி பெற வருபவர்களை முதலில் ஸ்டார் பவுண்டேசனில் 250 ரூபாய் கட்டணம் கட்டி உறுப்பினராகச் சேர்க்கவேண்டும். அடுத்ததாக எந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பு கிறார்களோ அதற்கு தனியாக கட்டணம் செலுத்தவேண்டும். தொடக்கத்தில் ஸ்டார் பவுண்டேசனின் நிறுவன இயக்குநர்களான இளவரசியும், அவரது கணவர் ஜெயராமன் இருவரும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று 50 பேர், 60 பேருக்கு புடவை, மூக்குத்தி தருவது, ஆட்டுக்குட்டி தருவது என செய்துள்ளனர்.
கடந்த 2022, ஜனவரி மாதம் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங் களைச் சேர்ந்த மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் லட்சம், லட்சமாக பணம் கொண்டுவந்து தந்துள்ளார்கள். கடைசியில் இந்நிறுவனமும் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டது.
மாவட்ட குற்றப்பிரிவு இந்த வழக்குகளை விசா ரிக்கிறது. ஸ்டார் பவுண்டேசன் 150 கோடிக்கு மோசடி நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. வி.ஆர். எஸ். நிறுவனத் தின் மீது நவம்பர் 23-ஆம் தேதி நிலவரப்படி 963 புகார்கள் வந்துள்ளன. இதே நிறுவனம் மாதாந்திர, வாராந்தர சீட்டு மூலம் 200 கோடி ரூபாய்க்கு மோசடி நடத்தியிருக்கும் என நினைக்கிறோம். மொய்தீன் சகோதரி நிஷாவின் வந்தவாசி வீட்டுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது, தப்பியவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார்கள் குற்றப்பிரிவு போலீசார்.
இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கமுடியாதா என திருவண்ணாமலையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் கிருஸ்டியிடம் கேட்டபோது, "மாதம் 300 ரூபாய் என்றால் ஆண்டுக்கு 3600 ரூபாய். இந்த பட்டியலுள்ள பொருட்களைக் கணக்குப்போட்டால் சராசரியாக 15,000 ரூபாய் வருகிறது. 3,600 ரூபாய் கட்டியவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் எப்படி தரமுடியும் என யோசித்தாலே இது ஏமாற்றுவேலை என்பது புரியும்.
தீபாவளி சீட்டு, பொங்கல் சீட்டு என ஊருக்கு ஊர் சீட் கம்பெனி ஆரம்பித்து பணத்தை திரட்டுகிறார்கள். சிலர் அறிவித்ததுபோல் தருகிறார்கள், பலர் தரமுடியாமல் சிக்கிக்கொள்கிறார்கள். ஏமாற்றியவர்கள் மீது இ.பி.கோ. 420 (மோசடி) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகின்றது. இந்த சட்டப் பிரிவின்கீழ் பெரிதாக எந்த தண்டனையும் கிடைக்காது. சில பிரிவுகளை வழக்கில் சேர்த்தால் அவர்கள் சொத்துக்களை முடக்கமுடியும். ஆனால் அப்படி எல்லா வழக்கிலும் சேர்க்கமுடிவதில்லை. இதனைத் தெரிந்துகொண்டே புற்றீசல்போல் சீட்டு நிறுவனங்கள் உருவாகி பலவிதங்களில் மக்களை ஏமாற்று கிறார்கள். சட்டங்கள் வலிமை யானால் மட்டுமே மோசடியாளர் களுக்கு பயம் வரும். சதுரங்க வேட்டையாளர்களிடம் மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்'' என்றார்.